இவ்வாண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான தூய செபஸ்தியார் பேராலயத்தில் இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.இவ்வாண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான தூய செபஸ்தியார் பேராலயத்தில் இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில்
கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்து வழிபாட்டு ஒழுங்குகளையும் சிறப்பாக மேற்பொண்டிருந்தார். இத் திருப்பலியில் பல குருக்கள் இணைந்து பலி செலுத்தினர். அத்தோடு பல அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் இவ் வழிபாட்டில் பங்கேற்றுச் செபித்தனர்.