மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் பிரதிநிதிகள், தன்னார்வப் பணியாளர்களின் பிரதிநிதிகள், செபக்குழு உறுப்பினர்கள், கததோலிக்க ஆசிரியர் சங்கப் பிரதி நிதிகளுக்கான வருடாந்த கிறிஸ்து பிறப்பு மகிழ்வு ஒன்று கூடல் 21.12.2018 வெள்ளிக் கிழமை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் பிரதிநிதிகள், தன்னார்வப் பணியாளர்களின் பிரதிநிதிகள், செபக்குழு உறுப்பினர்கள், கததோலிக்க ஆசிரியர் சங்கப் பிரதி நிதிகளுக்கான வருடாந்த கிறிஸ்து பிறப்பு மகிழ்வு ஒன்று கூடல் 21.12.2018 வெள்ளிக் கிழமை மாலை 06.00 மணிக்கு மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலிய, கல்வி அருட்பணிகளுக்கான மையமான தூய வளன் அருட்பணி மையத்தில் மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகையின் பிரசன்னத்தில் நடைபெற்றது.
மறைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல, பிதிநிதிகள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர். புல்வேறு கலை நிகழ்வுகளும், மகிழ்வுப் பகிர்தலும், கலந்துரையாடலும், இடம்பெற்றன. இந் நிகழ்வில் முதன்மை இடம் பெற்றிருந்த வழிபாடு இனைவரையும், இறை பிரசன்னத்திற்குள் அழைத்துச் சென்று, செபிக்கவும் தியானிக்கவும் உதவியது