மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் எல்லா அருட்பணியாளர்கள், துறவியர்களுக்குமான வருடாந்த கிறிஸ்து பிறப்பு மகிழ்வு ஒன்று கூடல் 20.12.2018 வியாழக் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் எல்லா அருட்பணியாளர்கள், துறவியர்களுக்குமான வருடாந்த கிறிஸ்து பிறப்பு மகிழ்வு ஒன்று கூடல் 20.12.2018 வியாழக் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது
முதலில் மன்னார் பேராலயத்தினுள் செப வழிபாடு, துறவற சபைகளின் பல்வேறு பிரதிநிதிகளால் ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தூய செபஸ்தியார் பேராலய ஒன்று கூடல் மண்டபத்தில் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகையின் பிரசன்னத்தில் கலைநிகழ்வுகளும், மகிழ்வுப் பகிர்தலும் இடம்பெற்றன.