ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறி

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, கல்வி, திருவிவிலிய அருட்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் தூய வளன் அருட்பணிமையம் ( மறைக்கல்வி நிலையம்) 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 05.12.2018 புதன்கிழமை வரை ஞானோதயம் தியான இல்லத்தில் இலங்கை வேதாகமச் சங்கத்தின் அனுசரணையோடு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்கக் கூடிய ஆற்றுப்படுத்துனர்களுக்கான பயிற்சி நெறியொன்றினை வழங்கியது.

கொழும்பு அதி உயர் மறைமமாவட்டத்தினதும், இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்பப் பணிகளுக்குமான தேசிய இயக்குனர் அருட்பணி. குளோட் நோனிஸ் அடிகளார், மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி. துசிக்கா, திரு.றோமுலஸ் பெனாண்டோ ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து பயிற்சிகளை வழங்கினர். அனைத்துப் பணிகளையும் இலங்கை வேதாகமச் சங்கத்தின் மனித வள அபிவிருத்தி முகாமையாளர் திரு.விலக்சித மெண்டிஸ் நெறிப்படுத்தினார்.

தொடக்க நாள் நிகழ்வுகளுக்கு இலங்கை வேதாகமச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண.பிறியந்த விஜயகுணவர்த்தன  வருகை தந்து ஆரம்பித்து வைத்தார்.அத்தொடு மன்னார் மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலர் சபை இயக்குனர் அருட்பணி.ச.சவுல்நாதன் அவர்களும் கலந்த கொண்டார்.

இறுதிநாள் பயிற்சி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு இலங்கை வேதாகமச் சங்கத்தின் இணைத் தலைவராக இருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராக வருகைதந்து சான்றிதழ்களை வழங்கினார். இதற்கு மன்னார் மறமாவட்ட தூய யோவேவ்வாஸ் குடும்ப, உளவளத்துணை நிலைய இயக்குனர் அருட்பணி.ச.எமிலானுஸ்பிள்ளை, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *