06.12.2018 வியாழக்கிழமை வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சோர்ந்த அருட்சகோ.றொசாயேல் அன்ரனி றெவல் அன்ரன் ஞானறாஜ் றெவல் அவர்கள் சலேசியன் ( டொன்பொஸ்கோ) துறவறசபை அருட்பணியாளராகவும், கற்கிடந்தகுளம் பங்கு, இசைமாலைத் தாழ்வு தூய பிலிப் நேரியார் ஆலயத்தைச் சேர்ந்த சகோ.லூர்துநாயகம் ஜெஸ்மன் றாஜ் தியாக்கோனாகவும் ( மன்னார் மறைமாவட்டத்தின்) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் அருட் பொழிவு செய்யப்பட்டார்கள்.
அருட்பணி. றொசாயேல் அன்ரனி றெவல் அன்ரன் ஞானறாஜ் றெவல் அவர்கள் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கின் 32வது அருட்பணியாளராகவும், சலேசிய துறவற சபையின் வட மாகாணத்திலிருந்து தம்மை அர்ப்பணிக்கும் முதல் குருவாகவும் திகழ்கின்றார்.
இத் திரு நிகழ்விற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அரடு;பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் எனப் பலர் கலந்து செபித்தனர்.