மன்னார் மறைமாவட்டதின் தொடரும் ஆண்டுகளுக்கான அருட்பணி இலக்காக முன்னெடுத்துச் செல்லப்படக்கூடிய திட்டம் பற்றிய ஆய்வுக்கான ஒன்று கூடல் மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பொது நிலையினர், குடும்ப அருட்பணி மையத்தில் கார்த்திகை மாதம் 20ந் திகதி செவ்வாய் தொடக்கம் 22ந் திகதி வியாழக்கிழமை வரை நடை பெற்றது.செவ்வாய்க் கிழமை 2ந் திகதி மாலை திருச்சபையின் திருவழிபாட்டு மரபுக் கொப்ப ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. புதுப்பித்தலை மையப்படுத்திய இந்த நிழ்வினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை ஆசீர்வதித்து ஆரம்பித்து வைத்தார்.
தனி நபர் புதுப்பித்தல், இளையோருக்கான புதுப்பித்தல், குடுப்பங்களுக்கான புதுப்பித்தல், அன்பியங்களுக்கான புதுப்பித்தல் என்னும் இலக்குகளை முன்வைத்து கலந்துரையாடலுக்கான உள்ளீட்டு உரைகள் வழங்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. மன்னார் மறைமாவட்டத்தின் பங்குப் பிரதி நிதிகள், துறைசார் வல்லுனர்கள், மறைமாவட்டப் பணிக்குழுக்களின் பிரதிநிதிகள், துறவிகள், குருக்கள் என 175 பேர் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இவ் அருட்பணித் திட்டமிடல் குழுவின் செயலர் அருட்பணி.ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகள் இக் குழவின் ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்போடு அனைத்து நிகழ்வுகளையும் நெறிப்படுத்தினார்.