மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி வருடந்தோறும் மறைமாவட்டப் பங்குகளிடையே நடாத்தும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய இசைப்போட்டி கடந்த 06.11.2018 செவ்வாய்க் கிழமை மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கலையருவி கேட்போர் கூடத்தில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மன்னார் மறைமாவட்ட அயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். பெருந்தொகையான குருக்களும், துறவிகளும், பார்வையாளர்களும், போட்டியாளர்களும் இந் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
மன்னார் மறைமாவட்டத்திலிருந்து பல பங்குகள் மிகுந்த ஆர்வத்தோடு இப்போட்டியில் கலந்து கொண்டன. கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு என இரண்டு பிரிவாக நடைபெற்ற இப்போட்டிகளில் மேல் பிரிவில் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கு முதலிடத்தையும், உயிலங்குளம் தூய பேதுருவானவர் ஆலயப் பங்கு இரண்டாம் இடத்தையும், மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன:
கீழ்ப்பிரிவில் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயப் பங்கு முதலிடத்தையும், வவுனியா வேப்பங்குளம், தூய யோசேப்பு ஆலயப் பங்கு இரண்டாம் இடத்தையும், அந்தோனியார்புரம் தூய அந்தோனியார் ஆலயப் பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.