தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 25.10.2018 வியாழக்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் பேராலயப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்திருக்கின்ற உப்புக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தூய யோசேவாஸ் சிற்றாலயத்திற்கான கட்டிடப்பணிகளும், காணியும் ஆசீர்வதிக்கப்பட்டது. பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் பிரசன்னத்தில் இறைமக்கள் ஒன்று கூடி நிற்க மகாகல்கமுவ தூய யோவே வாஸ் திருத்தல அதிபர் அருட்பணி.அலெக்ஸ் ஜானக அடிகளார் செபவழிபாடு நடாத்தி அச் சிற்றாலயப்பகுதி முழவதையும் ஆசீர்வதித்தார். அதன் பின்; தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை மீளவும் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பிரியாவிடை வழிபாடுகள் நடைபெற்று பேராலயப்பங்கின் இணைப் பங்குத் தந்தை அருட்பணி.மொ.போ.பிற்றர் மனோகரன் அடிகளாரால் ஆசீர் வழங்கப்பட்டு தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை பேசாலைப் பங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.