தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 25.10.2018 வியாழக்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பேசாலை பங்குத் தந்தை அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேசாலை, சிறுத்தோப்பு, கீளியன்குடியிருப்பு, தலைமன்னார் பங்குகள் இணைந்து தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவையை வரவேற்றன:தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி.இ.அகஸ்ரின் புஸ்பறாஜ், கீளியன்குடியிருப்புப் பங்குத்தந்தை அருட்பணி.ஜெஸ்லி ஜெகானந்தன், பேசாலை உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. பசில் கிளைன், சிறுத்தோப்பு பங்குத் தந்தை அருட்பணி.அன்ரன் ஜோசவ் மற்றும் அப் பங்குகளில் பணியாற்றும் அருட்சகோதரிகள், இறை மக்கள் எனப் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
சிறுத்தோப்பு வங்காலைப்பாடு சந்தியிருந்து பேசாலைப் பங்கிற்கான தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை வரவேற்;புப் உந்துருளிப் பவனி ஆரம்பமாகியது. பேசாலை அருட்பணி.ஞானப்பரகாசியார் நினைவுத் தூபி அருகில் ஒன்று கூடிநின்ற இறைமக்கள், துறவிகள், குருக்கள் திருச் சிலுவையை வரவேற்றனர். இவ்விடத்திலிருந்து பேசாலை தூய வெற்றி அன்னை ஆலயம் வரையுள்ள சுமார் 500மீற்றர் வரையுள்ள பாதையின் அரு பக்கமும் அணிவகுத்து நின்ற மாணவர்கள் மலர் தூவி தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவையை வரவேற்றனர்.
இத் திருச் சிலுவை தாங்கிய அலங்கார இரதம் பேசாலை தூய வெற்றி நாயகி ஆலயத்தின் பிரதான வாயிலை அடைந்ததும், மகாகல்கமுவ தூய யோவே வாஸ் திருத்தல அதிபர் அருட்பணி.அலெக்ஸ் ஜானக அடிகளார் தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவையை பேசாலை பங்குத் தந்தை அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அவர்களிடம் வழங்கினார்.
அங்கிருந்து ஆலயத்தின் பீடமுற்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட திருச்சிலுவை அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் பேசாலை, சிறுத்தோப்பு, கீளியன்குடியிருப்பு, தலைமன்னார் பங்குகள் வழிபாட்டினை முன்னெடுத்துச் சென்றன.