மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்களை உருவாக்கும் படிமுறையின் நாற்று மேடையாகத் திகழும், மடுமாதா சிறிய குருமட விழா இன்று (13.10.2018) சனிக்கிழமை மகிழ்ச்சிப் பிரவாகத்தோடு நடைபெற்றது.இன்று காலை 09.30 மணிக்கு சிறிய குருமட அதிபர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம், உதவி அதிபர் அருட்பணி.பீ.தயாளன் கூஞ்ஞ, மடுமாதா சிறியகுருமட மாணவர்கள், மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர் நலன் விரும்பிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை வரவேற்றனர்.
ஆதன் பின்னர் ஆயர் தலைமையில் திருவிழாத் திருப்பலி இடம்பெற்றது. திருப்பலியின் முடிவில் சிறிய குருமட கேட்போர் கூடத்தில் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன.