மருதமடுத் திருத்தாயாரின் வதிவிடமான மடுத்திருப்பதி செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு இடமாகும். இத் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் முதல் சனிக்கிழமை செபமாலை அன்னையின் திருவிழா கொண்டாடப்படுகின்றது. நேற்று 06.10.2018 சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் திருவிழாத் திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில் சிலாபம் மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி நெல்சன் அடிகளார் கலந்து சிங்கள மொழியிலான வழிபாடுகளை நடாத்தினார்.