இத்தாலி பலெர்மோ தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் சன் நிக்கொலா ஆலயத்தில் 30.09.2018 அன்று 35 இளையோருக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மனுவேல் பெர்னாந்துவினால் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. இத்திருப்பலியின் ஒழுங்கமைப்பை ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்பணி. விமல் அமதி மேற்கொண்டதோடு 2019இல் ஆன்மீக இயக்குனராக பொறுப்பெடுக்கவுள்ள அருட்பணி. பீற்றர் இராஜநாயகமும் (அமதி) தற்போதைய பலெர்மோ அமதிகள் குழுமத்தின் முதல்வர் அருட்பணி. அதிரியான் அமதி அவர்களும் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இதற்;கு முன்னையநாள் 29.09.2018 அன்று மன்னார் ஆயர் உத்தியோகபூர்வமாக பலெர்மோ மறைமாவட்ட பேராயர் கொறாதோ லொறபிச்சேயினையும் சந்தித்ததோடு மாலை பலெர்மோவின் பாதுகாவலி சாந்த றோசலியா திருத்தலத்தையும் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
தகவல் – இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்