மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்தில் இன்று 05.10.2018 வெள்ளிக்கிழமை மாலை திருப்பயணிகளின் ஆன்மிகத் தேவையை நிறைவு செய்யம் பொருட்டு இலங்கை செலான் வங்கியின் நிதியுதவியுடனும், மடுத்திருத்தல பங்களிப்புடனும் தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை செலான் வங்கியின் தேசிய நிர்வாக இயக்குனர் திரு.அபில ஆரியரத்தின அவர்களின் அழைப்பின்பேரில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களினால் இத் தியான மண்டபம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மடுத் திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொய்சி பெப்பி சோசை அடிகளார், செலான் வங்கியின் பிரதேச முகாமையாளர் திரு சுரேஸ் சுப்றம், கிளை முகாமையாளர் திரு கோகுலன் மற்றும் செலான் வங்கியின் பல்வேறு கிளை முகாமையாளர்கள், பணியார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் செலான் வங்கியின் பணியாளர்கள் நிகழ்விற்கான அனைத்துப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்.