மருதமடுத் திருத்தலத்தில் நாளை (06.10.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ள செபமாலை அன்னை திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை இன்று (05.10.2018) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.மடுத்திருப்பதில் இன்று மழைவீழ்ச்சி அதிகமாக இருந்ததால் பிரதான ஆலயத்தின் உள்ளேயே அனைத்து வழிபாடுகளும் நடைபெற்றன. இவ் மாலைப் புகழ் வழிபாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களோடு அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோபேட் அண்றாடி அவர்களும் பல குருக்களும் பங்கேற்றனர். பெருந்தொகையான இறைமக்களும் இன்றைய மாலைப் புகழ் வழிபாட்டில் கலந்து செபித்தனர்.