இலங்கை தேசிய கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய அருட்பணி மையம், மறைவாழ்வுக் கல்விப் பணியாளருக்கென வருடந்தோறும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தும் மறைவாழ்வுக் கல்வி முதல் தேர்வு, இடைநிலைத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய தேர்வுகள் நேற்று 22.09.2018 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணிவரை இலங்கை முழுவதிலுமுள்ள மறைமாவட்டங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட பரீட்சை மையங்களில் நடைபெற்றன.
மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் தூய சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலை ஆகிய பரீட்சை மையங்களில் மன்னார் மறைமாவட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நடைபெற்றது. எல்லாப் பிரிவுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் இப் பரீட்சையை எழுதினார்கள்.