மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், தற்போது அமெரிக்கா நியூயோர்க் மறைமாவட்டத்தில் பணி புரிபவருமான அருட்பணி ஆலோசியஸ் பாக்கியநாதர் அடிகள் தனது குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு நிறைவினை நேற்று 22.09.2018 மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் கொண்டாடினார்.இந் நன்றித் திருப்பலியில் பல மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்டத்திலிருந்து அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும் கலந்து செபித்தனர்.