கத்தோலிக்க திரு அவையின் பொது நிலையினரை இறையியல் நம்பிக்கை உண்மையில் வலுப்படுத்தும் நோக்கோடு: மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் பேரார்வத்தினால் மன்னார் மறைமாவட்டத்தில் பொதுநிலையினருக்கான இறையியல் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டள்ளது.கடந்த 01.09.2018 சனிக்கிழமை இக்கற்கை நெறி மரபியல் ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று காலை நடைபெற்ற மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற திருவழிபாட்டைத் தொடர்ந்து திருச்சபையியின் சட்ட மரபு நியமங்களுக்கொப்ப மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகத்தின் இயக்குனராக அருட்பணி.ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகளாரை மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் நியமித்து பணிப்பொறுப்பை ஒப்படைத்தார். மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகத்தின் இயக்குனராக அருட்பணி.ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகள் இறைமக்கள் முன்பாக தனது பணி நம்பிக்கை பொறுப்பு அறிக்கையை வாசித்து பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயக் கேட்போர் கூடத்தில் இக்கற்கை நெறிக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன: இந்நிகழ்வுக்கு உரோமை திருத்தந்தையின் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள் கொழும்பு தூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியத்தின் இக்குனர் அருட்பணி தயா செல்ரன் அடிகளார், கொழும்பு தூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியத்தின் தமிழ் பகுதியின் இயக்குனர் அருட்பணி றெஜினோல்ட் லூசியன், யாழ்ப்பாணம் தூய யோசேவ்வாஸ் இறையியல் கல்வியத்தின் இயக்குனர் அருட்பணி இ.ம.றவிச்சந்திரன் அடிகளார், கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தின் மெய்யியல்துறைக்கான இயக்குனர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் கொழும்புத்துறை தூய சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்பணி மைக்கல் சவுந்தரநாயகம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி திரு.அன்ரன் புனிதநாயகம், மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் பேரவைத் தலைவர் திரு. போஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந் நிகழ்வின் தொடக்க விரிவுரையின் சுருக்க உரையை திரு அவையின் ஒழுக்கவியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பின் கீழ் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தின் மெய்யியல்துறைக்கான இயக்குனர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் வழங்கினார். 165 பொது நிலையினர் இக் கற்கை நெறியில் இணைந்த கொள்ள விண்ணப்பித்து இத் தொடக்க நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர். மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் துறவிகள் எனப் பலரும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.