மடுமாதா திருத்தலத்தில் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி

மடுமாதா திருத்தலத்தில் இன்று வியாழக்கிழமை  காலை (09.08.2018) மடுத் தேவாலயத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மத்திய அரசு வழங்கிய சிறிய நிதியுதவியுடன் மன்னார் மறைமாவட்ட நிதிப் பங்களிப்போடு இப் புதிய கட்டிடம் திறந்த வைக்கப்பட்டது.இன்று காலை மன்னார்  ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் இக் கட்டிடத் தொகுதி ஆசீர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மோகன்றாஸ், மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, மடுப்பதிருப்பதியின் தற்போதைய பரிபாலகர் அருட்பணி. ச.எமிலியானுஸ்பிள்ளை, மருதமடுத் திருப்பதிக்கான புதிய பரிபாலகர் அருட்பணி ச.ஜொய்சி பெப்பி சோசை அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மடுத்திருத்தல நிர்வாகத்தின் கீழ் திருச்சிலுவைக் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் மடுத் திருத்தல வைத்தியசாலை இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே உள்ள கட்டிடத் தொகுதியில் இடப் பற்றாக்குறை இருப்பதால் இப் புதிய கட்டடிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத் தொகுதியில் நோயாளர் தங்கியிருந்து சிசிச்சை பெறும் பிரிவு, வைத்தியர்கள் நோயாளரைப் பார்வையிடும் பகுதி, மருந்தகம், சிறப்புச் சிசிச்சைப் பிரிவு, வைத்தியர்களுக்கான தங்குமிடம் என்பன புதிய வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *