நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு.

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பங்கைச் சேர்ந்த திரு, திருமதி மிக்கேல் பிலிப் ,சுசீலா பேணடேற் ஆகியோரின் மகன் அருட்சகோதரர் பேணாட் ஷா பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையில் இணைந்து தனது முதல் அர்ப்பணத்தை 24.05.2014 அன்று எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆழ் நிலைப் பயிற்சியின்பின் இன்று 02.08.2018 வியாழக்கிழமை தனது நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.சில ஆண்டுகளாக பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் துறவறப் பயிற்சியக்தில் துறவற பயிற்சியைப் பெற்ற பின் நாடு திரும்பி னார். இன்று 02.08.2018 வியாழக்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் போது அருட்சகோதரர் பேணாட் ஷா நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார்.

இத் திரு நிகழ்வில் பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையின் உருவாக்குனர் அருட்பணி லெனாட் கல்ட்டேரா, இலங்கைக்கான இச் சபையின் முதல்வர் அருட்பணி எட்வேட் ஜெயபாலன் அடிகளார் மற்றும் பெருந்தொகையான குருக்கள், துறவிகள், இறைமக்கள் கலந்து செபித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *