மன்னார் மறை மாவட்டத்தின் 44வது பங்காகாக மடுறோட் தூய சிந்தாத்திரை மாதா ஆலயப் பங்கு இன்று (08.07.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் ஆயராகப் பெறுப்பேற்றதின் பின்னார் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பங்கு இதுவாகும்.கடந்த இரண்டரை வருடங்களாக பரீட்சார்த்த நிலையில் கண்காணிக்கப்பட்ட இவ் ஆலயத்தைச் சேர்ந்த கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்றுமுதல் புதிய நிரந்தரப் பங்காக உருவாக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் அருட்பணி க.அருள்பிரகாசம் அடிகளார் பங்குப் பணியாளராக இருந்து சிறப்பானதொரு அடித்தளத்தை இட்டுக் கொடுத்துள்துள்ளார். இப் புதிய பங்கின் பங்குத் தந்தையாக அருட்பணி.பா.றொசான் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை ஆயரின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் கத்தோலிக்க திருச்சபையின் சட்ட ஒழுக்கக் கோவை ஒழுங்கின் படி புதிய பங்குத் தந்தை அருட்பணி.பா.றொசான் அடிகளார் தமது வாக்குறுதியை மக்கள் முன் வாசித்து உறுதியளித்ததின் பின் ஆயர் அவர்கள் நியமனக் கடிதத்தை வாசித்தளித்தார்.
இப் புதிய பங்கு மடுறோட் தூய சிந்தாத்திரை மாதா ஆலயத்தை தலைமை ஆலயமாகக் கொண்டு, பூமலர்ந்தான், தேக்கம், நெடுங்குளம், 2ம் கட்டை ஆகிய கிரமங்களை உள்ளடக்கியதாக அமைந்தள்ளது. இன்று மாலை ஆயர், புதிய பங்குத் தந்தை, ஆரம்ப பணி முன்னெடுப்பாளர் அருட்பணி. க.அருள்பிரகாசம் மற்றும் பிரமுகர்கள் மன்.தட்சனாமருதமடு பாடசாலை மாணவர்களின் மேற்கத்திய இசைக்குழுவின் மகிழ்வொலியோடு வரவேற்கப்பட்டனர்.
இத்; திருப்பலியில் பங்குமக்கள்;, குருக்கள், துறவிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்கள் கலந்து செபித்தனர்.