புதிதாக அமைக்கப்பட்ட சிலாவத்துறைப் பங்கின் தலைமை ஆலயமான சவேரியார் புரம் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் கடந்த திங்கள் மாலை ( 18.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார்.
கடந்த 18.06.2018 மாலை 05.00 மணிக்கு சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை பிரதான விதியிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் நுழைவாயியிலிருந்து, ஆயர் அவர்கள் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மரபு ரீதியான வரவேற்ப்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் புதிய ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தும் திரு நிகழ்வை முறைப்படி முன்னெடுத்துச் சென்றார். பங்குத் தந்தை அருட்பணி.செ.அன்ரன் தவறாஜா அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்.
இந் நிகழ்வில் பெருந்தொiயான இறைமக்களும், அரச, அரச சார்பற்ற பணியக முதன்மைப் பணியார்களும், குருக்கள் துறவியரும் கலந்து கொண்டனர்.


























































































































































































































































































