மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் அருட்பணிப் பரப்பெல்லைக்குள் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிக்க தள்ளாடி தூய அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13.06.2018 புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாடுகளின் பின்னர், நேற்று 12.06.2016 செவ்வாயக் கிழமை மாலைப் புகழ் ஆராதனையும், இன்று திருவிழாத் திருப்பலியும் இடம் பெற்றன.இன்றைய விழாவில் அருட்பணியாளர்கள், துறவிகள், பெருந்தொகையான இறைமக்கள் கலந்து கொண்டனர். ஆயத்த வழிபாடுகளில் மன்னார் தூய பேராலயப்பங்கு மக்கள், வங்காலை தூய ஆனாள் பங்கு மக்கள், பள்ளிமுனை தூய லூசியா பங்குமக்கள் தங்களுடைய ஆன்மிகப் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.
பணிக்குழுக்களோடும், மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கில் பணியாற்றும் ஏனைய அருட்பணியாளர்களோடும் இணைந்து பங்குத்தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அனைத்து திருவிழா ஒழுங்குகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.