இந்திய மண்ணலிருந்து மன்னார் மறைமாவட்டத் திற்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அமல உற்பவ அன்னை துறவறசபை அருட்சகோதரிகள் தங்களுக்கான நிரந்தர இல்லமொன்றை மன்னார் சாந்திபுரம் பங்கின் பணி எல்லைக்குள் அமைந்துள்ள சவுத்பார் என்னும் பகுதியில் அமல அன்னை நகர் என்னும் இடத்தில் அமைத்துள்ளனர்.
இன்று (06.06.2018) புதன்கிழமை மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் ஆசீர்வதிக்க , அமல உற்பவ அன்னை துறவறசபை அருட்சகோதரிகளின் இலங்கைக்கான இணைப்பாளர் அருட்சகோதரி தைனிஸ் மேரி அவர்கள் இல்லத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அருட்பணியாளர்கள், துறவிகள், அரச, அரச சார்பற்ற பணியாளர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.