தேவன்பிட்டி தூய சவேரியார் ஆலயப் பங்குச் சமூகம் தங்கள் பங்கின் பாதுகாவலராகிய தூய சவேரியார் திருவிழாவை 19.05.2018 சனிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனர்.திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்கள் ஒப்புக் கொடுத்தார். 18ந் திகதி திருவிழாவிற்கு ஆயத்தமாக மலைப்புகழ் ( வேஸ்பர்) ஆராதனை இடம் பெற்றது. இவ்வழிபாட்டினை அருட்பணி றொக்சன் குரூஸ் வழிநடாத்தினார்.
தேவன்பிட்டி பங்குத் தந்தை அருட்பணி. அருட்குமரன் அடிகள் அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளையும் ஒருங்கமைத்து வழிநடாத்தினார்.