இடம் பெயர்ந்து தமது சொந்த மண்ணுக்கு திரும்பிய பம்பைமடு மடுக்குள கிராம மக்கள் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது சொந்த மண்ணில் மீளவும் கிறிஸ்தவ விசுவாசத்தை பலப்படுத்தும் முகமாக தூய யூதா ததேயுவைப் பாதுகாவலராகக் கொண்டு ஆலயம் அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.நேற்றைய தினம் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை கிழமை பங்குத் தந்தை அருட்பணி.ஜெஸ்லி ஜெகானந்தன் அடிகளார் அருட்சகோதரிகள், மடுக்குள கிராம மக்கள் ஆகியோரின் பிரசன்னத்தில் புதிய ஆலயத்திற்காக முதல் அடித்தளக் கல்லை இறை வழிபாட்டோடு ஆசீர்வதித்து நடுகை செய்தார். அதன்பின் அருட்சகோதரிகளும் மக்களின் சில பிரதி நிதிகளும் அடித்தளத்தல் கல் பதித்தனர்.