மே:12 புனித பங்கிராஸ்

மே:12

புனித பங்கிராஸ்
மறைசாட்சி-(கி.பி.304)

14 வயது நடக்கும் போது இந்த இளைஞர் டயக்ள{சியன் காலத்தில் சித்திரவதைக்கும் கொடிய சாவுக்கும் உள்ளானார். இவரின் மாமன் டெனிஸ் என்பவர் இவரை வளர்த்து வந்தார். ஆவர் கிறிஸ்துவுக்காக சிறையில் தள்ளப்பட்டிருந்தார். பங்கிராஸ் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். கி.பி. 508ம் ஆண்டு திருத்தந்தை சிம்மக்கியஸ் இவரது கல்லறை மீது ஒரு பேராலயம் எழுப்பினார். உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் காட்சியளிக்கிறது!

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப் பெற்றவரெனில் லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்புப் பணிக்கென இங்கிலாந்து சென்றபோது இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்குத் துறவுமடம் கட்டினார். அடுத்து இந்த சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தபோது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயர் சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் பபியோலா என்ற பெயரில் எழுதிய புதினம் பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதியது. பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் தகவல் மிக மிகக் குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்றுவரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் ஜயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *