பிச்சைகுளம் தூய செபமாலை அன்னை ஆலய மக்கள் இன்று 10.05.2018 வியாழக்கிழமை தங்கள் பாதுகாவலி திருச்செபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.இன்று காலை 07.15 மணிக்குத் திருவிழாத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவப் பவனியும் நடைபெற்றது. பல குருக்களும், துறவிகளும், அரச, அரச சார்பற்ற பணியாளர்களும், இறைமக்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர். பங்குத் தந்தை அருட்பணி. எமில் எழில்றாஜ் அடிகளார் சிறப்பாக அனைத்து திருநிகழ்வுகளையும் ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்.