மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனர் மற்றும் பணியாhளர்கள், தங்களது பணி மையத்திற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை இன்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.00மணிக்கு வரவேற்றனர்.இன்று காலை இடம்பெற்ற வரவேற்ப்பைத் தொடர்ந்து கலையருவியின் செயற்திட்டங்கள் பற்றி கலையருவியின் இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம் (தமிழ் நேசன்) அடிகளார் விளக்கியுரைத்தார். இந் நிகழ்விற்கு திரு.சதீஸ் அவர்கள் தலைமை தாங்க: இளைப்பாறிய கேட்டக் கல்வி அதிகாரிகளான திரு.மாட்டின் டயஸ், திருமதி.பெப்பி விக்ரர் லெம்பேட் ஆகியோர் கலையருவியின் பல்வேறு பணித்திட்ட வளர்ச்சி பற்றி ஆய்வுகளை வளங்கினர்.
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவி கலைபண்பாடு, மன்னா பத்திரிகை மற்றும் ஊடகப்பணி, பல் சமய உரையாடல் போன்ற பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இத் துறையில் இவ் அருட்பணி மையத்தோடு இணைந்து பணியாற்றும் பணியாளர்கள், கலைஞர்கள் எனப் பலர் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.
இறுதியில் கலையருவியின் ஒலிப்பதிவுக் கலையகத்திற்குச் சென்ற ஆயர் கலையருவியின் ஒலிப்பதிவு பொறியலாளர் திரு. போஸ்கோ அவர்களைச் சந்தித்து, கலையருவி மிக விரைவில் வெளிக் கொணரவிருக்கின்ற புதிய மொழிபெயர்ப்புத் திருப்பலிச் செபங்களின் பாடல் இறுவெட்டுக்கான, தனது; ஆசிச் செய்தியையும் ஒலிப் பதிவு செய்தார்: