பெரிய பண்டிவிரிச்சான் தூய மரியகொறற்றி ஆலயப் பங்குச் சமூகம், மன்னார் மறைமாவட்ட ஆயர் போரருட்கலாநிதி இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்களுக்கான பங்கு மட்டத்திலான அன்பின் வரவேற்ப்பை அளித்தது.கடந்த 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு வாத்திய மகிழ்வு இசையுடனும் பண்பாட்டு நடனத்துடனும் மக்கள் ஆயரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் திருப்பலி ஒப்புக் கொடுத்தார்.
இவ்விழாவிற்கு மடு பிரதேசச் செயலர் திரு.சத்தியசோதி, இந்து சமயக் குரு மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பங்குத்தந்தை அருட்பணி.ச.சவுல்நாதன் அடிகளார் பங்கு அருட்பணிப் பேரவையோடும், பங்கில் பணியாற்றும் துறவிகளோடும் இணைந்து அனைத்து நிகழ்வுகளையும் முறைப்படி நெறிப்படுத்தி செயற்படுத்தியிருந்தார்.