வவுனியா மறைக்கோட்டத்தின் வேப்பங்குளம் தூய யோசேப்பு பங்குச் சமூகம் இன்று 01.05.2018 செவ்வாயக் கிழமை தங்கள் பாதுகாவலராம் தூய யோசேப்பு விழாவைக் கொண்டாடிய அதே வேளையில் தங்கள் பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கும் மகத்தான வரவேற்பளித்தது.வவுனியா இறம்பைக் குளம் தூய அந்தோனியார் ஆலயத்திலிருந்து வேப்பங்குளம் பங்கைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலாராரும் உந்துரளி பவனி ஆயரை ஆலயத்திற்குச் செல்லும் மன்னார் வவுனியா பிரதான வீதி வரை அழைத்து வந்தனர். அவ்வித்தில் அருட்பணியாளர்களும், துறவிகளும், பங்கு மக்களும் ஆயரை வரவேற்றனர்.
தொடர்ந்து மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ஆயர் அவர்களின் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு முடிவில் தூய யோசேப்பின் திருவுருவப் பவனியும் நடைபெற்று. புனிதரின் திருவுருவ ஆசீரோடு விழா நிறைவுற்றது.