வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த இளைப்பாறிய ஆசிரியர் திரு.பிரான்சிஸ் பீரிஸ் மற்றும் அவருடைய மகன் செல்வன் செரூபா பீரிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கத்தோலிக்கப் பாடல்கள் அடங்கிய பண்ணிசைப்போம் என்னும் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று 22.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை வங்காலையில் நடைபெற்றது.
இவ் விழாவின் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இவ் வெளியிட்டு விழாவிற்கு ;, மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார், மற்றும் குருக்கள், துறவிகள், அரச-அரச சார்பற்ற பணிமையத் தலைவர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை அருட்பணி. பெய்லன் குரூஸ் அவர்கள் தொகுத்து வழங்க, தலைமையுரையினை அருட்பணி.பா.கி.நேசரெட்ணம் (தமிழ்நேசன்) அடிகளாரும், இறுவெட்டு மதிப்பீட்டுரையை செபமாலைத் தாசர் சபையைச் சேர்ந்த அருட்பணி. நிர்மலறாஜ் அடிகளாரும் வழங்கினார்கள்.
முதல் இறுவெட்டினை மன்னார் ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் வெளிட அதன் முதல் பிரதியை வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கைச் சேர்ந்த மூத்த அருட்பணியாளர்களுள் ஒருவரான அருட்பணி. மொறாயஸ் அ.ம.தி. அவர்கள் பெற்றுக் கொண்டாhர். இந் நிகழ்வில் சில பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.