மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லம் நிறைவான ஆன்மிக பணியை வழங்கிவருவது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். இத் தியான இல்லத்தில் தற்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கத்தோலிக்க மக்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குழுக்களாக வந்து ஆன்மிக கருத்தமர்வுகள், தியானங்களை மேற் கொண்டு வருகின்றனர்.
வதிவிட வசதியோடு கூடிய இத் தியான இல்லம் இயற்கைச் சூழலில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.