மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் இன்று 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.இத்தியானம் வரும் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடையும். இத்தியானத்தை நெறிப்படுத்த இந்தியா தமிழ் நாடு இரட்சணிய அருட்பணியாளர் சபையைச் சேர்ந்த அருட்பணி. இக்னேசியஸ் அடிகளார் வருகை தந்துள்ளார்.
இன்றைய நிகழ்வுகள், ஆரம்ப இறை வேண்டுதலுடனும், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரின் வரவேற்புரையுடனும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களின் அறிமுக உரையுடனும், தியான நெறியாளரின் தியானச் சிந்தனையுடனும் ஆரம்பமாகின. நாம் அனைவரும் நம் அருட்பணியாருக்காகச் செபிப்போம்