பெரிய குஞ்சுக்குளம் தூய அங்காமத்து மாதா பங்குச் சமூகம் தங்களது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆயர் தந்தை இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு11.04.2018 புதன் கிழமை மாலை வரவேற்பளித்தது.தங்களது பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த ஆயர் தந்தை அவர்களை ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் வைத்து மாலையிட்டு வரவேற்கப்பட்ட பின்னர், மன்.அபரிய குஞ்சுக்குளம் றோ.க.த.க பாடசாலையின் மேலை நாட்டு வாத்திய குழுவினரின் மகிழ்வொலியோடு ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன் பின் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய மணி தாங்கிக் கோபுரத்தை ஆயர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்து வைத்து முதல் மணியை ஒலிக்கச் செய்தார். அதன் பின் திருப்பலியும் அதன் முடிவில் கலை மற்றும்,
மதிப்பளிப்பு, நன்றி பகர்தல் நிகழ்வுகளும் இடம் பெற்றன. அனைத்தையும், ஆலய அருட்பணிப் பேரவையோடும், அருட்சகோதரிகளோடும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி.அன்ரனி சோசை அடிகளார் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தினார்.