மறைசாட்சிகளின் தியாகத்தால் வலுவூட்டப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கத்தோலிக்க விசுவாசப் பாரம்பரியங்களை துல்லியமாக எடுத்துக்காட்டும் கத்தோலிக்க அருட்சின்னங்கள், ஆலயங்கள், கட்டிடங்கள், நினைவிடங்கள், கல்லறைகள் என்பன மன்னார் மறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து கிடப்பதை பலர் அறியாதிருக்கலாம்.அண்மையில் மன்னார் மறைமாவட்டத்தின் சில அருட்பணியாளர்கள் ஆயரின் பணிப்புரையில்இந்த இடங்களையெல்லாம் பார்வையிட்டு விசுவாச வரலாற்றுக் குறிப்புக்களை பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் பெரிய கரிசல் என்னுமிடத்திலுள்ள சம்பிரதாயக் குருக்களின் பணியின் அடையாளமாக இருக்கும் கப்பலேந்தி மாதா குருசுக்கோவில், சம்பிரதாயக் குருக்களின் திருச் சிலுவை, எருக்கலம் பிட்டியிலுள்ள தூய பேதுரு ஆலயம், என்பனவற்றோடு சவுத்பார் மற்றும் வவுனியான மறைக்கோட்டத்திலுள்ள கன்னாட்டி,செட்டிகுளம், முதலியார் குளம் போன்ற இடங்களிலுமுள்ள கத்தோலிக்க வரலாற்றிடங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இவற்றைவிட தொன்மையான கத்தோலிக்க விசுவாசப் பாரம்பரியங்களை சான்றாகக் கொண்டிலங்கும் மேலும் பல இடங்கள் உள்ளதை இவர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.