மன்னார் மறைமாவட்டத்தின், வவுனியா மறைக்கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா 08.04.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு பல நூறு இறைமக்கள் பங்குகொள்ள கொண்டுடாடப்பட்டது.
மடு மறைக்கோட்ட முதல்வரும், மடுத் திருத்தலப் பரிபாலகருமான அருட்பணி.ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் திருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். பல அருட்பணியாளர்களும் துறவிகளும் இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்றனர்.