மன்னார் மறை மாவட்டத்தின், வவுனியா மறைக் கோட்டத்தில், பம்பைமடுப் பங்கின் 5ம் மைல் என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ள இறை இரக்க ஆண்டவர் திருத்தலத் திருவிழா நாளை (08.04.2018) ஞாயிற்றுக் கிழமை மாலை 03.00 மணிக்கு கொண்டுடாடப் படவுள்ளது. மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுவார்கள். இவ் ஆலயத்திற்குச் சில சிறப்பான அம்சங்கள் உண்டு.
மன்னார் மறைமாவட்டத்தி ல் உள்ள ஒரேயொரு இறை இரக்க திருத்தலம் இதுவாகும். அத்தோடு இறை இரக்க வெளிப்பாடு அருட்சகோதரி தூய பவுஸ்தீனாவுக்கு அருளப்பட்ட இடமாகிய போலந்து நாட்டின் கிறாக்கோ என்னும் இடத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தூய பொருளொன்றும் வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் அழகாக அமைக்கப்பட்டள்ள இந்த திருத்தல ஆலயத்திற்கு பல மக்கள் ஆன்மிக தாகத்தோடு வந்து போவதையும் அவதானிக்க முடிகின்றது. அருட்பணி.யெஸ்லி ஜெகானந்தன் அடிகளார் இங்கு பங்குத் தந்தையாகப் பணி புரிகின்றார்.