மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் பெண், ஆண் துறவற சபைகளின் மேலாளர்களுக்கான ஒன்று கூடல் அண்மையில் நடைபெற்ற பொழுது, இவர்களுக்கான புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டது.முன்னைய பணிக்குழுவின் பணி எல்லைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டது. இப்பணிக்குழவின் தலைவராக அமலமரித் தியாகிகள் சபையின் அருட்பணியாளர் அல்பன் இராஜசிங்கம் அடிகளாரும், செயலாளராக அன்புக் கன்னியர் சபை அருட்சகோதரி மரியா கிருதா அவர்களும், பொருளாளராக கிளறிசியன் சபை அருட்பணியாளர் ஜெயசீலன் அடிகளாரும் தெரிவு செய்யப்பட்டனர்.