நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள் இன்று (30.03.2018) மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றன. பெருந்தொகையான மக்கள் மிகவும் பக்தி உணர்வுபூர்வமாக இவ் வழிபாட்டில் பங்கேற்றனர்.
இறைவார்த்தை வழிபாடு, திருச் சிலுவை ஆராதனை, நற்கருணை போன்ற முக்கிய திருவழிபாடுகளின் முடிவில், தூய வெள்ளி பக்தி முயற்சியான இயேசுவின் மரணத்தை மையப்படுத்திய ஆசந்தி திரு நிகழ்வும் இடம்பெற்றது.