உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க மக்கள் இன்று
( 29.03.2018) இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணை யையும் ஏற்படுத்திய நாளை நினைவுகூரும் வேளையில் மறைசாட்சிகளின் மண்ணாம் மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாகத் திகழும் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் தூய வியாழன் வழிபாடுகள் இன்று மாலை மிகவும் ஆன்மிகச் செழுமையோடு நடைபெற்றன.
மன்னார் பேராலயத்தில் பணியாற்றும் அருட்பணி யாளர்களும் இத் திருப்பலியில் ஆயரோடு இணைந்து கொண்டனர். திருப்பலி, பாதம் கழுவும் திருச் சடங்கு, நற்கருணை இடமாற்றப் பவனி என்பன சிறப்பாக நடைபெற்றன. பெருந்தொகையான இறைமக்களும், துறவிகளும் இத் திருவழிபாட்டில் பக்தி அருட்சியோடு கலந்து கொண்டனர்.