வவுனியா, இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் 20 ஆண்டுகளுக்குப்பின் தமது பங்கில் இயேசுவின் திருப்பாடுகளைப் பிற்பலமாகக் கொண்ட வலி சுமந்த திருமகன் என்னும் திருப்பாடுகளின் காட்சியை அரங்கேற்றினர். 25.03.2018 மாலை ஆலய வளவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மேடையில் இந் நிகழ்வு இடம் பெற்றது. பங்குத் தந்தை அருட்பணி.ச.சத்தியறாஜ் அடிகளாரின் வழிநடாத்துதலில் பங்கு அருட்பணிப் பேரவையினரின் பங்களிப்போடு கலாபுசணம் திரு.பிலேந்திரன் அவர்களின் நெறியாழ்கையில் இவ் ஆற்றுகை சிறப்பாக அரங்கேற்ப்பட்டது.
மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆசி வழங்கி இத் திரு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பெருந் தொகையானோர் இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
























































































































