நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற திருவருட் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு முடிவுற்ற பின்னர் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் மன்னார் ஆயர் இல்லத்தில் ஒன்று கூடி நற்கருணை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டனர்.