மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களின் ஒன்றியம் இன்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை தமது மாதாந்த ஒன்று கூடலின் போது வரவேற்று மதிப்பளித்தனர்.இன்று மாலை 03.30 மணிக்கு மன்னார் தலைமன்னார் முதன்மை வீதியில் தூய மரியன்னை ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள அமைதியின் தூய பிரான்சிஸ் சபை அருட்சகோதரிகளின் இல்லத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் ஆயரை இவ் ஒன்றியத்தின் மேலாளர் அருட்பணி போல் ச.ச. அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார். அதன்பின் மறைமாவட்டத்தில் பணியாற்றும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களுக்கான மறைமாவட்ட இணைப்பாளர் அருட்பணி அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி. அடிகளார். இவ் ஒன்றியத்தின் செயலர் அருட்சகோதரர். றெஜினோல்ட் டி.ச. ஆகியோர் வரவேற்க அதன்பின் அங்கு குழுமியிருந்த ஏனைய துறவிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அமைதியின் தூய பிரான்சிஸ் சபை அருட்சகோதரிகளின் முன்பள்ளி மாணவர்கள் மேலைத்தேச மகிழ்வொலி இசைத்து ஆயருக்கு மதிப்பளித்தனர். பின்னர் ஆயருடனான ஒன்று கூடல் இடம்பெற்றது. ஒவ்வொரு துறவற சபை யினரும் மன்னார் மறைமாவட்டத்தில் தங்களின் பணிகள் பற்றி ஆயருக்கு எடுத்துக்கூறினர்.
மன்னார் மறைமாவட்டத்தில் 22 துறவற சபைகள் 57 பணி இல்லங்களை அமைத்துப் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்து ஒழுங்குகளையும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களுக்கான மறைமாவட்ட இணைப்பாளர் அருட்பணி அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி. அடிகளார் மேற்கொண்டிருந்தார்.