மன்னார் மறை மாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தின் தலைமை ஆலயமாக உள்ள வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு கடந்த 18.02.2018 ஞாயிற்றுக் கிழமை மகத்தான வரவேற்பளித்தது.அன்று காலை 07.00 மணிக்கு ஆயரை குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து உந்துருளி அணிவகுப்போடு வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்பின் வவுனியா நகரத்திலிருந்து இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையின் மேற்கத்திய மற்றும், தமிழ்பண்பாட்டு இசைக்குழவினரின் மகிழ்வொலி இசைமுழக்கத்துடன் ஆயர் அவர்கள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆலயத்தில் திருத்தந்தையின் கொடியை ஆயர் அவர்கள் எற்றி வைத்த பின்னர், நினைவு மரமொன்றினை நடுகை செய்தார். தென் பின் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சிறிய கலை நிகழ்வும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் குரக்கள், துறவிகள், இறைமக்கள், பல் சமயத் தலைவர்கள், அரச அரசசார்பற்ற பணியக முதல் நிலைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
பங்குத் தந்தை அருட்பணி.சத்தியறாஜ், உதவிப் பங்குத் தந்தை அருட்பணி பெயிலன் ஆகியோர் பங்கு அருட்பணிப் பேரவையோடு இணைந்து அனைத்தையும் ஒழுங்கபடுத்தி நெறிப்படுத்தினர்.