பிப்ரவரி : 14 புனித சிரில் புனித மெத்தோடியுஸ்

பிப்ரவரி : 14

புனித சிரில் புனித மெத்தோடியுஸ்
ஆயர்கள்-(கி.பி. 869-884)

கூடப்பிறந்த சகோதரர்களான சிரில், மெத்தோடியுஸ் என்பவர்கள் தெசலோனிக்கா என்ற ஊரில் உயர்ந்த குடும்பத்தில் தோன்றி இளமை முதல் இறைவனுடன் ஒன்றி வாழ்ந்து வந்தனர். சிரில் தமது அறிவுத் திறமையால் எல்லாக் கலைகலையும் கற்றுத் தேர்ந்து “வல்லுநர்” எனும் பட்டத்தையும் பெற்றார். பிறரின் ஆன்ம ஈடேற்ற அலுவலுக்காக உழைத்தார். மெத்தோடியுஸ் துறவற நிலையைத் தெரிந்து கொண்டார். சிரில் சித்தியா நாட்டிற்குச் சென்று பண்படாதிருந்த அந் நாட்டினரை மெய் மறையில் சேர்த்தார். பின்னர் பல்கோரியா நாட்டிற்குச் சென்றார். அங்கு மெத்தோடியுசோடு சேர்ந்து அந்நாட்டவருக்கு மெய்மறையைப் போதித்தார். அந்த நாட்டு அரசன் ஒரு மாளிகை கட்டி அதை பல அழகிய படங்களால் அழகுபடுத்த எண்ணினார். ஓவியக் கரையில் தேர்ந்த மெத்தோடியுசை வரவழைத்து, அச்சம் வருவிக்கும் ஒரு படத்தை வரையுமாறு கேட்டுக் கொண்டார். அவர் பொது தீர்வை படத்தை தெரிந்து கொண்டு திறம்பட வரைந்து காண்பித்தார். அரசன் அதைப் பார்த்து அதன் பொருளை கேட்டு புரிந்து கொண்டார். அச்ச நடுக்கத்தோடு மெய்மறையைத் தழுவி திருமுழுக்குப் பெற்றார். சிறிது காலத்திற்குப் பின் துறவியானார். சிரில், மெத்தோடியுஸ் ஆகிய இருவரும் பாப்பரசரால் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டனர். பின்பு பல நாடுகளுக்குச் சென்று மிகுந்த ஆர்வத்தோடு மெய்மறையை போதித்தனர். கணக்கில்லாத மக்கள் மனந்திரும்பினர். சிரில் உரோமைக்கு திழரும்பி வரும் வழியில் நோயினால் இறந்தார். அதற்குப் பின் நீண்ட காலம் திருச்சபைக்காக உழைத்த மெத்தோடியுஸ் பல எதிர்ப்புக்களை திருச்சபைக்குள்ளேயே சந்தித்தாலும் அத்தகைய இடுக்கண்களின் இடையே ஸ்லாவிக் மொழியில் விவிலியம் முழுவதையும் 8 மாதங்களுக்குள் மொழி பெயர்த்தார். இதன் பின்னர் புனித வாரத்தில் செவ்வாய்க் கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *