மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர் பிரதிநிதிகளுக்கான சிறப்பு ஒன்றுகூடல் இன்று (13.02.2018) செவ்வாய்க்கிழமை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில், மன்னார் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்லி, விவிலிய பணிக்குழுவின் இயக்குனர் அருட்பணி.பி.சே.றெஜினோல்ட் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் மறையாசிரியர் பரதிநிதிகள் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்வில் பொது நிலையினரின் பணியும் உருவாக்கமும் பற்றிய விழிப்புணர்வு ஆற்றுப்படுத்தல் உரையை கட்டைக்காடுப் பங்குத் தந்தை அருட்பணி.ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகள் வழங்கினார்.
இந் நிகழ்வின் போது மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் வருகை தந்து மறையாசிரியர்களோடு கலந்துரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்டத்திற்கான மறைக்கல்வித் தொடர்பாளர் அருட்பணி.அ.லக்ஸ்ரன் டீ சில்வா அடிகளாரும், மறைக்கல்வி நிரந்தரப் பணியாளர்களான மறையாசிரியர்கள். திரு.செபஸ்தியாம்பிள்ளை, திரு.சவிரி, திரு.கென்றி அருமைநாதன் ஆகியோரும் உடனிருந்து செயற்பட்டனர்.