மன்னார் மறைமாவட்டத்தின் ஆட்காட்டிவெளிப் பங்கின் பரப்பெல்லைக்கள் அமைந்துள்ள ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க பரப்புப்கடந்தான் கர்த்தர் ஆலயத்தில் நேற்று (11.02.2018) மாலை 06.00 மணிக்கு மாபெரும் சுகமளிக்கும் வழிபாடு இடம்பெற்றது. ஆட்காட்டிவெளி பங்குத்தந்தை அருட்பணி.எ.டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் தவக்கால ஆன்மிகத் தயாரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந் நிகழ்வை மிகவும் ஆன்மிக செழுமை நிறைந்ததாக ஒழுங்கு படுத்தியிருந்தார்.
இந்தியா, தமிழ்நாடு சேத்துப்பட்டு மாதா மலையில் அமைந்துள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி மையத்தின் இயக்குனர் அருட்பணி.யா.அந்தோணிறாஜ் அடிகளார் சுகமளிக்கும் வழிபாட்டை நடாத்தினார். இவருக்கு உதவியாக இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த புதுவாழ்வுக்குழுப் பணியாளர் சகோ.இளங்கோ பாடல்களை நெறிப்படுத்தி செபித்தார்.
பெருந்தொகையான மக்கள் இவ்வழிபாட்டில் பங்கேற்றுப் பயனடைந்தனர். இவர்களோடு முருங்கன் பங்குத்தந்தை அருட்பணி. றொக்சன் குரூஸ் அடிகளாரும் இணைந்து கொண்டார். அருட்பணி.யா.அந்தோணிறாஜ் அடிகளாரின் நற்செய்தி அறிவிப்புப் பணி , மன்னார் மறைமாவட்டத்தின் சில பங்குகளில் இம்மாதம் 26ந் திகதி வரை இடம்பெறும்.