பிப்ரவரி:05 புனித ஆகத்தம்மாள்

பிப்ரவரி:05
புனித ஆகத்தம்மாள்
கன்னி, மறைசாட்சி-(கி.பி.251)

இவர் பாலெர்மோ,கட்டோனியா ஆகிய இரு நாடுகளின் பாதுகாவலி. இவர் இறந்த ஓராண்டிற்குப் பின் எட்னா மலையில் தோன்றிய எரிமலையின் நெருப்பு ஆறு இவரிடம் எழுப்பிய மன்றாட்டின் பயனாக நீங்கியது. இதன் பொருட்டு இன்றுவரை நெருப்பிலிருந்து பாதுகாப்புப்பெற இவரது உதவி நாடப்படுகிறது. எட்னா எரிமலை உருகி தீப்பிழம்புகள் சீறி வெளிவரும் போதெல்லாம் இன்றும் கட்டோனியா மக்கள் ஆகத்தம்மாள் பயன்படுத்திய தலையில் மூடும் துணியை மக்கள் பார்வைக்கு வைத்து வணக்கத்துடன் செபிக்கின்றனர்.
உயர் குலத்தில் தோன்றிய ஆகத்தம்மாளை இவரின் பெற்றோர் இறைவனிடம் முழுமையாக அர்ப்பணித்தனர். அலகையினாலும் அரக்கர்களாலும் அவரது கற்ப்புக்கு ஏற்பட்ட சோதனைகளை அளவில்லாத மனவலிமையுடன் வென்றார். கொடுங்கோலாட்சி புரிந்து வந்த டீசீயஸ் காலத்தில் இக்வின்தானுஸ் என்பவன் இவரை மணந்து கொள்ள முயன்றான். முயற்சி பயன்தரவில்லை. இதனால் சினம் கொண்டு இவரை ஒரு கிறிஸ்தவர் என்று குற்றம் சாட்டினான். இவரைக் கெடுக்க ஒரு தீய பெண்ணை ஏவிவிட்டான். புனிதவதி அசைவுறவில்லை. பிறகு கடுமையாக அடிக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டார். அவரின் மார்பு முதலாக அறுக்கப்பட்டது. அன்றிரவே புனித பேதுரு அவருக்குத் தோன்றி காயங்களைக் குணமாக்கினார். பின்னர் கொலைஞர்கள் நெருப்பு மூட்டினர். அதில் இவரைத் தூக்கி எறிந்தனர். அந்நேரத்தில் அந்நகர் மூழுவதும் அதிர்ந்ததைக் கண்ட மக்கள் தனக்கு எதிராக குழப்பம் செய்வர் என்றறிந்த அதிகாரி இவரை மீண்டும் சிறையிலடைக்க கட்டளையிட்டான். நெருப்பில் அடைந்த காயங்களால் தமது தூய ஆன்மாவை இறைவனிடம் அர்ப்பணித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *