மன்னார் மறைமாவட்டத் தின் பொது நிலை யினர் பேரவையின் செயலாக்கப் பணிக் குழுவின் உத்தியோக பூர்வ தெரிவு 03.02.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்குக் குடும்பம் பொது நிலையினர் பணிக்குழு மையத்தில் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த அருட்பணி அந்தோனி பாக்கியம் அடிகளார் பணியாளரின் மனநிலை, பணியாளர் தெரிவு போன்றவற்றிற்கான தெளிவு, ஆற்றுப்படுத்தல் உரை வழங்கினார். மன்னார் மறைமாவட்ட குடும்பம், பொது நிலையினர் பணிக்கான இயக்குனர் அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அடிகளார் பொது நிiலியனர் பேரவையின் யாப்பினை வாசித்து விளக்கினார்.
அதன்பின் பணியாளர்களுக்கான தெரிவு நடைபெற்றது. முதலில் செயலாளராக மன்னார் பேராலயப் பங்கைச் சோந்த திரு.எஸ். சதீஸ் தெரிவு செய்யப்பட்டார். தோடர்ந்து இடம் பெற்ற தலைவருக்கான தெரிவில், யாப்பின்படி பொது நிலையினர் பேரவையின் தலைவரை நியமனம் செய்வது மன்னார் மறைமாவட்ட ஆயரையே சாரும் என்ற அடிப்படையில், கட்டைக்காடு பங்கின் மணற்குளத்தைச் சேர்ந்த திரு. செபஸ்தியாம்பிள்ளை அவர்களை நியமிப்பதாக மன்னார் ஆயர் அனுப்பியிரந்த செய்தியை குருமுதல்வர் தெரியப்படுத்தினார்.
அதன் பின் இடம் பெற்ற தெரிவுகளில் பதில் தலைவராக வவுனியா இறம்பைக்குளம் பங்கைச் சேர்ந்த திரு.செந்தில் றூபன் அவர்களும், பதில் செயலாளராக வங்காலைப்; பங்கைச் சேர்ந்த திருமதி.பெப்பி லெம்பேட் அவர்களும், பொருளாளராக பண்டிவிரிச்சான் பங்கைச் சேர்ந்த திரு.அ.ஜெயசீலன் வாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். அத்தோடு மறைக்கோட்டங்களுக்கான இரண்டு பிரதிநிதிகள் ஒவ்வொரு மறைமாவட்டத்திலுமிருந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவ் அமைப்பின் ஆன்மிக வழிகாட்டியாகவும், இயக்குனராகவும், மன்னார் மறைமாவட்ட குடும்பம், பொது நிலையினர் பணிக்கான இயக்குனரே இருப்பார் எனவும் குருமுதல்வர் அறிவித்தார்.