மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் தூய மரியன்னை விழாவிற்கான மாலைப் புகழ் (வேஸ்பர் ) வழிபாடு இன்று 01.02.2018 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது.இன்றைய வழிபாடுகளை இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மறைமாவட்ட பனிமயமாதா பசிலிக்காவின் இயக்குனரும், பங்குத் தந்தையுமான அருட்பணி. லெறின் டீ றோஸ் அடிகளார் நடாத்தினார்.சிலை வழிபாடு ஒரு விவிலியப் பார்வை என்னும் மையப் பொருளில் மறையுரையாற்றினார்.
பல குருக்கள்,துறவிகள் பெருந்தொகையான இறைமக்கள் இன்றைய மாலை வழிபாட்டில் பங்கேற்றனர்.